தடகளம் குறித்து சிறப்பு விரிவுரை


புதுக்கோட்டை ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), உடற்கல்வித்துறை சார்பாக "தடகளம் குறித்து சிறப்பு விரிவுரை" பற்றிய கருத்துக்களை மாவட்ட தடகள சிறப்பு பயிற்சியாளர் Mr.S.செந்தில் கணேஷன் (NSNIS) அவர்கள் “ தடகளத்தில் உள்ள சமீபத்திய மாற்றங்கள்” குறித்தும் சிறப்பாக விளக்கினார்.

அவர் தம் உரையில் சர்வதேச அளவிலான விதிமுறைகளை பற்றி விளக்கினார். அதேபோல் தற்போது தடகளத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்னவென்று மிக தெளிவாக விளக்கினார். மேலும் மாணவர்கள் தங்களுக்குள்ள சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.

தடகள வீரரை எவ்வாறு உருவாக்க வேண்டும், இளமையில் வீரர்களை எவ்வாறு கண்டறிய வேண்டும் விiளாயட்டு வீரர்களின் உணவு எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் சமீபத்திய பயிற்சி உபகரணங்கள் எவ்வாறு உள்ளன அதன் பயன்கள் என்ன என்பதனையும் கூறினார்.

நீண்ட நெடிய பயிற்சியே சிறந்த தடகள வீரரை உருவாக்கும் என்று கூறினார். மேலும் சர்வதேச தடகள வீரர்களின் பயிற்சி முறைகளையும் சாதனைகளையும் குறிப்பிட்டார்.

உடற்கல்வித்துறை தலைவர் முனைவர் .K. ஜெகதீஷ் பாபு அவர்கள் தடகளம் குறித்து சிறப்பு விரிவுரையை தொடங்கி வைத்தார். S. பாண்டிசெந்திகா, (மூன்றாம் ஆண்டு) வரவேற்பு உரை வழங்கினார். P. கேத்தரின் ஜாய் செல்வகுமாரி அவர்கள் "தடகளம் குறித்து சிறப்பு விரிவுரை"-க்கு அமைத்துக் கொடுத்தார். K. விஷாலினி (மூன்றாம் ஆண்டு) நன்றியுரை வழங்கினார்.