Upcoming Events
  •  ()
Facebook Twitter


ஜெ.ஜெ. கலைஅறிவியல் கல்லூரி,தாவரவியல் துறை, மூன்றாமாண்டுமாணவர் திரு.டே.ஜேசுதாஸ் ஹால்வீன் கடந்த 27 ஜூலை 2019 நாள் முன்னாள் குடியரசுதலைவர் டாக்டர் A.P.J.அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு காஞ்சி முத்தமிழ் மையம் சார்பாக இம்மாணவனுக்கு சிறந்த சமூக ஆர்வலர் விருது வழங்கி கௌரவித்தது. இம்மாணவன் 8-ஆம் வகுப்பு படிக்கும் போது தான் பார்த்த விழிப்புணர்வு நாடகம் தனக்குள் ஒரு தாக்கத்தை உருவாக்கியதாகவும்,அந்த தாக்கத்தை செயல்படுத்த அவ்வப்போது திட்டங்களும் முயற்சிகளும் செய்து வைத்ததையும் அதன் விளைவாக 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ஆம் தேதி தன்னுடைய நெருங்கிய நண்பர்களான சீனிவாசன்,சதீஸ் மற்றும் நவீன் ஆகியோர் உதவியோடு 50 மரக்கன்றுகளுடன் தன் சமுதாய பணியை தொடங்கி உள்ளார்.
தனது சமுதாய பசுமையை மேம்படுத்தும் வகையில் கிடைக்கும் விடுமுறை நாட்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வெற்றி பரிசாக மரக்கன்றுகள் வழங்கியது. தனக்கு ஒரு சிறப்பு வரவேற்பையும் ஒருஅங்கீகாரத்தையும் கொடுத்ததாகவும் கூறுகிறார்.
இந்த முயற்சி சிறப்பான வரவேற்பை கொடுக்க திருமயம் சார்பதிவாளர் முன்னிலையில் தான் நண்பர்கள் உள்ளிட்ட ஒரு தொண்டு நிறுவனத்தை “Last Green Plantation” உருவாக்கி அதன் மூலம் இது நாள் வரையில் 4680 தாவரங்கள் நடப்பட்டு இருப்பதாகவும் மேலும் பசுமை மீட்போம்,மரம் வளர்ப்போம் மழைநீர் பெறுவோம்,விதை–மரமும் உரமும் இதுபோன்ற 6 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை திருமயம்,மகமாயிபுரம்,அரசம்பட்டி, இளஞ்சாவூர்,மேலூர் போன்ற கிராமங்களில் தன் முயற்சியினால் நடைபெற்றதுஎனவும் தெரிவித்தார்.
இதனிடையே காஞ்சி முத்தமிழ் மையம் முனைவர் லாரன்ஸ் அவர்களால் நடத்தப்பெற்ற 1000 வெள்ளைப் புறாக்கள் ஒரே நேரத்தில் சமூக ஆர்வலர்கள் வானில் பறக்கவிட்டதற்காகவும்,உலகசாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கான சான்றிதழும்,மேற்கண்ட சமூகசேவை செயல்பாட்டிற்கான சிறந்த சமூக ஆர்வலர் விருதும் வழங்கப்பட்டதுஎனவும் கூறினார்.
மாணவரை கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜ.பரசுராமன் பாராட்டினார். மேலும் கல்லூரியின் செயலர் திரு.நா.சுப்பிரமணியன் இம்மாணவன் தற்போதைய மாணவர்களுக்கெல்லாம் சிறந்த எடுத்துக்காட்டு எனவும் மாணவனின் முயற்சி மென்மேலும் சிறக்க வாழ்த்தினார்.