Upcoming Events
  •  ()
Facebook Twitter


புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்; (தன்னாட்சி) கணினி அறிவியல் துறை, கணினி பயன்பாட்டியல் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணைந்து 03.08.2019 அன்று “இன்றைய உலகின் டேட்டா சைன்ஸ், பிக் டேட்டா, ஏஐ, இயந்திரவியல்” என்ற தலைப்பில் சிறப்பு விரிவுரை மற்றும் செயல்விளக்க நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் இங்கிலாந்து லண்டனில் இயங்கி வரும் figiliti மற்றும் wholelot போன்ற இணைய தளத்தின் குழு இயக்குனர் ஷிவால்கர் பரமானந்தம் பங்கேற்று “இன்றைய உலகின் டேட்டா சைன்ஸ், பிக் டேட்டா, ஏஐ, இயந்திரவியல்” என்ற தலைப்பில் விரிவுரை மற்றும் செயல்விளக்கம் அளித்தார். இதில் இணைய தொழில்நுட்பம், பாதுகாப்பு சம்பந்தமாக உள்ள தொடர்பு பற்றியும், மாறும் பயன்பாடுகள் பற்றியும் கருத்துக்களை விளக்கமாக எடுத்துரைத்தார்.
காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்க கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் முனைவர் கவிதா சுப்பிரமணியன் தலைமையேற்றுத் தொடங்கி வைத்தார். கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் S.சுதா வரவேற்புரையாற்றினார். கணினி பயன்பாட்டியியல் துறைத்தலைவர் முனைவர் S.J.சதீஸ் ஆரோன் ஜோசப் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தகவல் தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் முனைவர் R.மணிமாறன் சிறப்பாக செய்திருந்தார். இதில் பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.