Upcoming Events
  •  ()
Facebook Twitter


புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியில் (தன்னாட்சி) தகவல் தொழில்நுட்பவியல் துறை ‘ஸ்பெக்ட்ரா’ சங்கத்தின் சார்பில் சிறப்பு கருத்தரங்கு 02.08.2019 (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
இதில் அதிராம்பட்டினம், காதர் மொகைதீன் கல்லூரியின் கணினி அறிவியல் துறை துணைப்பேராசிரியர் திரு.ம.தியாகராஜன் பங்கேற்று “நவீன உலகின் இணைய சேவைகள்” குறித்த கருத்துக்களை மற்றும் அதன் பயன்பாட்டையும் மாணவர்களுக்கு விளக்கியது மட்டுமல்லாமல் இணைய தொழில்நுட்பம், பாதுகாப்பு சம்பந்தமாக உள்ள தொடர்பு பற்றியும், மாறும் பயன்பாடுகள் பற்றியும் கருத்துக்களை விளக்கமாக எடுத்துரைத்தார். தகவல் தொழில்நுட்பவியல்துறை தலைவர் முனைவர் இரா.மணிமாறன் தலைமை வகித்தார். முன்னதாக தகவல் தொழில்நுட்பவியல் துறை துணை பேராசிரியர் திரு.U.கார்த்திகேயன் வரவேற்றார், தகவல் தொழில்நுட்பவியல்துறை துணை பேராசிரியர் முனைவர் N.பாலாஜி ராஜா நன்றிக் கூறினார். இதில் பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.