Alumni Meeting on 06/10/2019 (Sunday) - Registration Form (Click Here) Facebook Twitter


புதுக்கோட்டை, கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியின்; (தன்னாட்சி) செயலர் திரு.N.சுப்ரமணியன் அவர்கள், புதுக்கோட்டை, அரிமழம், அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியின் மாணவர்களின் கற்றல் தடையில்லாமல் நிகழ்திட, ஆய்வகத்திற்குத் தேவையான தடையில்லா மின்சாரம் பெறுவதற்கான சாதனங்களை (UPS) 27.02.2019 அன்று வழங்கினார்.
1994-ம் ஆண்டு துவங்கப்பெற்ற ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரி 25-ம் ஆண்டு வெள்ளி விழாவினைச் சிறப்பாக கொண்டாடி வருகிறது. அது விழாக்களாக மட்டுமின்றி, கல்லூரியில் பயிலும் மாணாக்கர்களுக்கான வளர்ச்சிக்கு மட்டுமின்றி, பள்ளி கல்வி மாணவர்கள், விளையாட்டு இளைஞர்கள் ஆகியோரின் வளர்ச்சிக்கும் பங்கு அளிக்கும் விதத்தில் தேவையான உதவிகளைச் செய்து வருகிறது. 06.01.2019 அன்று நடைபெற்ற வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சியில் புதுப்பொன்பட்டி அரசினர் மேல்நிலை பள்ளி (பெண்கள்), அரிமழம் ஆண்கள் அரசினர் மேல்நிலை பள்ளிக்கும் மேசை, நாற்காலிகளை வழங்கியது. இதனைத் தொடர்ந்து அரிமழம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியரின் வேண்டுகோளுக்கிணங்க கீழ்கண்ட தடையில்லா மின்சார சாதனங்களை இலவசமாக வழங்கினார்.
1. 4KVA மைக்ரோடெக் சினிவேஸ் தடையில்லா மின்சார சாதனம் (UPS)
2. 4KVA/48V@100 AH ஆம்பியர் மின்கலம்
இதனைக் கல்லூரி செயலர் N.சுப்ரமணியன் பள்ளி தலைமை ஆசிரியரிடம் நேரில் வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் ஜ.பரசுராமன் உடன் இருந்தார்.