Upcoming Events
  •  ()
Facebook Twitter


புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியில் 16.07.2019 அன்று நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சுருள் சங்கம் மற்றும் கடியாப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியன இணைந்து இரத்தத் தான முகாமை நடத்தின.
இம்முகாமை, கல்லூரியின் செயலர் திரு. நா. சுப்பிரமணியன் துவங்கி வைக்க கல்லூரி முதல்வர் முனைவர் ஜ.பரசுராமன் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார். முகாமினை புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி இரத்த வங்கியின் மருத்துவ அலுவலர் மருத்துவர் ரமேஷ் பாபு கடியாப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் முத்துராஜா கடியாப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஸ்ரீதர் அவர்களும் மற்றும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அலுவலர் குழுவும் சேர்த்து நடத்தினர். இதில் ஆசிரியர்களும், மாணவர்களும் இரத்த தானம் செய்தனர். 78 அலகுகள் இரத்ததானம் செய்யப்பட்டன.
நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள், முனைவர் இரா.மணிமாறன், முனைவர் C.முத்துக்குமார். முனைவர் கி.கோவிந்தன், முனைவர் மா.ஆறுமுகம், திருமதி. P.பிரியதர்ஷிணி செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் முனைவர் கு. தயாநிதி செய்திருந்தனர்.