News & Events : Payment Login/Upload Documents/Application Status Learner's Support Centre Facebook Twitter Facebook


தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் செயலூக்க நிதி நல்கையுடன் புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறையில் அறிவியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் 2019 பிப்ரவரி 13, 14, 15 ஆகிய மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. இது முறையே மகளிர் சுய உதவி குழுவினர், மாணாக்கர்கள், விவசாயிகள் என மூன்று நிலைகளில் நடைபெறுகிறது. இதன், முதல் நாளாக இன்று மகளிர் சுய உதவி குழுவினருக்கு நடைபெற்றது. அதன் தொடக்கவிழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் ஜ.பரசுராமன் அவர்களின் தலைமையுரையில் அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் உயர்ந்த ஆராய்ச்சி நிலைகளில் கண்டுபிடிக்கப்படுகின்ற கண்டுபிடிப்புகளைச் சாதாரண நிலையிலுள்ள மக்களின் அன்றாட தேவைகளுக்கும் பயன்படுகின்ற நிலைக்குக் கொண்டுசெல்வதே இதன் நோக்கமாகும். அந்நோக்கத்தை நிறைவேற்ற புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எங்கள் கல்லூரி ஒரு இணைப்புப் பாலமாக அமைந்துள்ளது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து வந்துள்ள நீங்கள் பல்வேறு சுய உதவிக் குழுவைச் சார்ந்தவர்கள். நீங்கள் இங்கு சொல்லப்படுகின்ற அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உங்கள் வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள வேண்டும். ஒரு தனி நபர் வருமானம் கூடும்பொழுதுதான் ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும். நாம் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளோமோ அல்லது மேல் உள்ளோமோ என்பதை நாமே தீர்மானித்துக்கொண்டு செயல்படவேண்டும். ஒருவர் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஒரு நாளைக்கு 2400 கலோரி உள்ள உணவினை வாங்கும் சக்தி உடையவர்களாக இருக்க வேண்டும். எனவே, நீங்கள் இந்நிலையை உணர்ந்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்ந்திட, உதவிட வேண்டும் என்று கூறினார்.