Welcome to KVET

நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்


ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டதின் சார்பாக புதுக்கோட்டை மாவட்டம் நச்சாந்துப்பட்டியில் 26/02/2019 முதல் 04/03/2019 வரை நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 28/02/2019 இதில் உடலே மருத்துவர் எனும் குணம் ஆக்கும் நிகழ்வு நடைப்பெற்றது இதில் அக்குஷீலர் திரு.மு.மலைப்பா, திருமதி அனிதா மற்றும் திருமதி ரஞ்சனி ஆகியோர் பங்கேற்று சிகிச்சையளித்தனர். இதில் 80க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இம்முகாமில் இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவத்தை பேராசிரியர் திரு. S.பழனியப்பன் அவர்கள் எடுத்துரைத்தார். 01/03/2019 அன்று விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைப்பெற்றது இதில் உயிர்வேதியியல் துறைத் தலைவர் திருமதி S.கனிதா மற்றும உதவிப் பேராசிரியர் திரு P.பழனியப்பன் பங்கேற்று பயிற்சியளித்தனர் இதில் 100 மேற்பட்ட விவசாயிகள் கலந்துக் கொண்டு பயன் அடைந்தனர். அன்று மாலை நடைப்பெற்ற நிகழ்வில் முனைவர் S.சுதா, துணை முதல்வர் பங்கேற்று மாணவிகளுக்கு சமூதாயத்தில் பெண்ணிற்கான பொறுப்புகள் என்ற தலைப்பில் பேசினார். அதே வேளையில் மாணவர்களுக்கு முனைவர் கதிர்.முருகு, உதவிப் பேராசிரியர் கணேசர் கலை அறிவியல் கல்லூரி பங்கு பெற்று போட்டித் தேர்வுக்கு எப்படி தயார் ஆவது என்ற தலைப்பில் உரையாற்றினார். இரவு நடைப்பெற்ற நிகழ்வில் முனைவர் K.ஜெகதீஷ்பாபு துறைத் தலைவர் உடற்க்கல்வித் துறை பங்கு பெற்று விளையாட்டில் ஆளுமை என்ற தலைப்பில் உறையாற்றினார். இம்முகாமில் ஸ்ரீஷண்முகா விலாஸ் கலாசலா பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக சோப்பு வழங்கி கை கழுவுவது பற்றி விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இதில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் நச்சாந்துபட்டி நகர சிவன்கோவில் மற்றும் நகர பெருமாள் கோவில்களில் வெளிப்பிறகாரம், உள்பிறகாரம் மற்றும் கோபுரங்களில் இருந்த முள் புதர்களை அகற்றி இறைப்பணியாற்றினர். இங்கு கஜா புயலால் பாதிக்கப்பட்ட கோவில் சுற்று சுவர்களை அப்புறப்படுத்தி கோவிலை சுத்தம் செய்தனர். இதில் விழிப்புணர்வு பேரணிகள் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களால் நடத்தப்பட்டது. முன்னதாக திட்ட அலுவலர் திரு இரா.மணிமாறன் வரவேற்புரையாற்றினார். இறுதியில் திட்ட அலுவலர் முனைவர் கி.கோவிந்தன் நன்றியுரையாற்றினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் முனைவர் சி.முத்துக்குமார், முனைவர் மா.ஆறுமுகம் மற்றும் திருமதி பி.பிரியதர்ஷினி ஆகியோர் செய்திருந்தனர்.