Alumni Meeting on 06/10/2019 (Sunday) - Registration Form (Click Here) Facebook Twitter


மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. மேசைப்பந்து போட்டிகளில் கலந்து கொண்ட ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் S.முருகேசன், M.விஜய், A.இஜாஸ் அகமது, A.ரியாஸ் அகமது ஆகிய மாணவர்கள் கலந்து கொண்டனர். 10-க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபெற்ற இப்போட்டியில் ஜெ.ஜெ. கல்லூரி அணியினர் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டியில் பங்குபெற தகுதி பெற்றனர். இப்போட்டியில் வென்ற விளையாட்டு வீரர்களை கல்லூரி செயலர் திரு.நா.சுப்ரமணியன், கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் முனைவர் கவிதா சுப்ரமணியன், கல்லூரி முதல்வர் முனைவர் ஜ.பரசுராமன், உடற்கல்வித் துறை உதவிப் பேராசிரியர்கள் முனைவர் K.ஜெகதீஸ் பாபு, முனைவர் D.ராமன் மற்றும் மாணாக்கர்கள் பாராட்டினர்.